கும்புக்கன் ஓயாவில் மூழ்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒக்கம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு பொசன் போயா தினத்தன்று உயிரிழந்துள்ளார்.
மொனராகலை றோயல் தேசிய பாடசாலையில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் திரந்த டில்ஷான் என்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் உறவினர்களுடனும் குடும்பத்தினருடன் கும்புக்கன் ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர்.
மாணவனின் சடலம்
நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த போது, மாணவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியாமல் போயுள்ளது. பின்னர், பிரதேச மக்களின் ஆதரவுடன், இறந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.இதற்கு முன்னரும் இந்த இடத்தில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.