உள்ளூராட்சி நிறுவனங்களை கண்காணிப்பதற்காக பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான அண்மைய தீர்மானத்திற்கு சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல். ஜி.புஞ்சிஹேவா இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை இன்று (ஜூன் 05) உள்ளூராட்சி அமைச்சின் முன் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், அவர்களின் கவலைக்கான காரணத்தை விளக்கியதோடு, தலைவர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதியாக இருப்பதால், அத்தகைய நியமனம் உள்ளுராட்சி நிறுவனங்களை அரசியலாக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நியமனம் தேவையற்றது
இதனால், மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்திருப்பவர்களுக்கு இது அநீதியாகிவிடும் என்று அவர் விளக்கியுள்ளார்.
மேலும் இந்த நியமனம் தேவையற்றது என கருதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்குள் தேவையான ஒருங்கிணைப்பை மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.