Loading...
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் கைக்குண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் குறித்த நபர் நேற்றிரவு மதுபோதையில் தனது வீட்டில் இருந்து பெரிய சத்தமாக தகாத வார்த்தைகளால் கத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளார்.
அதனால் பொறுமை இழந்த அயலவர்கள் பொலிஸ் அவசர சேவைக்கு அறிவித்ததை அடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவரை வீட்டினுள் தேடிய வேளை அங்கே கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்துள்ளனர்.
Loading...
அதையடுத்து கைக்குண்டை மீட்ட பொலிஸார், வீட்டில் மறைந்திருந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Loading...