இலங்கையில் பௌத்த மதத்திற்கு எதிராக எவர் இன்று பேசினாலும் பௌத்த மதத்தை சார்ந்தோர் துள்ளிக்குதிப்பதுவும் நீதிமன்றங்களில் வழக்குகளை போடுவதும் என்றாகி விட்டது.
தற்போது இலங்கையில் இரண்டு பெயர்கள் இன்று பேசுபொருளாக மாறிவிட்டன.ஒன்று போதகர் ஜெரோமி பெர்னாண்டோ மற்றயவர் நதாஸா எதிரிசூரிய.முதலாமவர் டுபாயில் மற்றயவர் விளக்கமறியலில்.
மற்றயவரின் மதத்தை புண்படுத்தினார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. நல்லது.ஆனால் இதை ஏன் மற்றய மதத்தவர் விடயத்தில் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பவர்கள் பின்பற்ற தவறுகின்றனர்.
குறிப்பாக தமிழர் நிலப்பரப்பில் வானளாவ உயரும் விகாரைகள் அதுவும் அத்துமீறி அடாத்தாக பிடித்த தனியார் காணிகளில்.இதை தட்டி கேட்டால் படையை கொண்டு மூர்க்கமாக அடக்கும் செயற்பாடு.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழரின் வாழ்விடங்களில் அடாத்தாக நீதிமன்ற தடையையும் மீறி கட்டப்படும் விகாரை.யாழ்ப்பாணத்தின் வலிவடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகளை பிடித்து இராணுவத்தினரால் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு விகாரைகள்.
முப்பது வருட போராட்டம் தமிழருக்கு கற்றுத் தந்த பாடம் என்னவென்றால் சிங்கள பேரினவாதம் அதன் குணாதிசயங்களில் இருந்து மாறப் போவதில்லை என்பதுதான்.
அப்படியென்றால் ஆயுத வழியில் பெறமுடியாமற்போன தமிழரின் உரிமையை மாற்றவே முடியாத சிங்கள பேரினவாதிகளின் அடிப்டை சித்தாந்தத்திலிருந்து அகிம்சை வழியில் சாதிப்பது சாத்தியமா?
என்னவோ போங்கள் காதுகளுக்கு நல்லிணக்கம் என்ற வார்த்தையை கேட்க மிகவும் நன்றாகத்தான் இருக்கிறது.