Loading...
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை கண்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது, சந்தேக நபர் நீதிமன்ற கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து பலத்த காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக காவல்துறையின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
Loading...
வைத்தியசாலையில் அனுமதி
இதன்படி இன்று மாலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது காவல்துறை பிடியில் இருந்து தப்பி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இவ்வாறு குதித்தவர் படுகாயமடைந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading...