Loading...
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி சார்பாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளருக்கான போரில் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இணைந்துள்ளார்.
64 வயதான மைக் பென்ஸ், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவின் 48வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.
Loading...
ஜனாதிபதி வேட்பாளருக்காக உத்தியோகபூர்வமாக பதிவு செய்துள்ள அவர், அடுத்த வாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வேட்புமனுவை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவின் குடியரசுக் கட்சி சார்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு என இதுவரை 7 பேர் வேட்பாளராக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...