விமல் வீரவன்ச சுதந்திர முன்னணியில் இருந்து விலகினாலும் தங்களுடனேயே இருப்பார், ஒருபோதும் பிரிந்து செல்ல மாட்டார் என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்ட அபயராம விகாரையில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகினாலும் கூட்டு எதிர்க் கட்சியுடன் தொடர்ந்தும் இருப்பார்.
இதே போன்றே இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும், தூய ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பிலவும் கூட்டணியிலிருந்து விலகி தற்போது கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றார்கள்.
தற்போது இவர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நீங்கிக் கொள்ள கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.