யாழ்.பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை கொட்டுபவர்களை இனம் கண்டுகொள்ள வசதியாக மாநகராட்சிமன்றம் நடமாடும் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது மற்றுமொரு கண்காணிப்பு கமரா சங்கிலியன் வீதியில் பொருத்தப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் வீதியில் பொது இடங்களில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டினால் கண்காணிப்பு கமராக்கள் மூலம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நல்லூர் பண்ணான்குளம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கமராவின் மூலம் இருசக்கர வாகனங்களில் வந்து திண்மக் கழிவுகளை கொட்டி வந்த பொதுமக்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கண்காணிக்கப்பட்டவர்கள் யார் என்பது இனம்காணப்படும் பட்சத்தில் அவர்களை சூழல் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வருகின்ற நாட்களில் யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் உரிய முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.