சர்வதேச தர பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியகமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கத்தில் வெடிக் குண்டு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியிடப்பட்ட வதந்திகள் காரணமாகவே, இந்த போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வெடி குண்டு அச்சுறுத்தல் தொடர்பில் பல சர்வதேச பாடசாலைகளின் அதிபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த விளையாட்டுப் போட்டிகள் இந்த மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஒரு வதந்தி எனவும்,சர்வதேச தரப் பாடசாலைகள் தங்கள் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என இலங்கை சர்வதேச தரப் பாடசாலைகளின் தலைவர் கூறியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இந்த விடயம் குறித்து முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை சர்வதேச தரப் பாடசாலைகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.