Loading...
50 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சூரியவெவ உள்ளூராட்சி மன்ற செயலாளர், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மைதானத்தை நடத்துவதற்காக வைப்பிலிடப்பட்ட தொகைக்கு நிவாரணம் வழங்குவதற்காக அவர் இந்த இலஞ்சத்தை பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள ஒருவரிடம் முதலில் ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாகவும் பின்னர் அதனை 50 ஆயிரம் ரூபாவாக குறைத்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Loading...