சீனா, பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் இந்தியா படையினருக்கு தேவையான பயிற்சிகளை வழங்கியதாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை படையினருக்கான 80 வீத வெளிநாட்டு பயிற்சிகளை இந்தியாவே வழங்கியதாகவும் தமிழ் நாட்டின் எதிர்ப்பு காரணமாக ஆயுதங்களை இந்தியா வழங்கவில்லை எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியா பல வழிகளில் போருக்கு உதவியது. இலங்கை படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்கியது. இலங்கை படையினருக்கு சீனா ஆயுதங்களை பல வருடங்களாக வழங்கி வந்துள்ளது.
ஆயுதங்களுக்காக நாங்கள் சீனாவை நம்பியிருந்தோம். பாகிஸ்தான், இஸ்ரேல், உக்ரைன், ரஷ்யா நாடுகள் போர் தளபாடங்களை வழங்கின.
இஸ்ரேல் டோரா, கிபீர் போர் விமானங்களையும் கடற்படையினருக்கான ஆயுதங்களையும் வழங்கியது. இராணுவ தாங்கிகள் மிக் போர் விமானங்களை உக்ரைனும் ரஷ்யாவுக்கு வழங்கியதாகவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.