டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக இலங்கையை வந்தடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு குரங்கம்மை தொற்று காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு இவ்வாறு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதுடன், அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா்.
வெளிநாட்டில் உள்ள தந்தைக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு குணமடைந்த பின்னர் அவர் நாட்டுக்கு வந்துள்ளமை தொியவந்துள்ளது.
தொற்று உறுதி
இந்நிலையில் தாய் மற்றும் மகள் இருவரும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த வேளை, அங்கு முன்னெடுக்ககப்பட்ட பாிசோதனையில் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.