Loading...
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை கருத்தில் கொண்டு கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
இதனை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.
Loading...
டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது விலைகளை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு உயர்வின் பலனை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்த விலைகள் காரணமாக இலங்கையில் கையடக்கத் தொலைபேசி விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
Loading...