பாடசாலைகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று முதல் டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள பாடசாலை நிர்வாகங்களின் ஆதரவுடன், பாடசாலைகளுக்கு அருகாமையில் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இந்த வருடத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் கம்பஹாவில் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41,000ஐ கடந்துள்ளது. அதேநேரம் ஐந்து மாதங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.