Loading...
சபரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அடுத்த வாரம் மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த நியமனம் வழங்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
Loading...
கம்பஹாவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக டிக்கிரி கொப்பேகடுவ, அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்த நிலையில் குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
Loading...