நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் கட்சியின் மாநாடு ஒன்று கூட்டப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மற்றும் ஹபரதுவ நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பை மாற்றியமைத்ததன் பின்னர் நாட்டின் அரசியலமைப்பையும் மாற்ற வேண்டும் என வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
வீழ்ச்சியடைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பலமான கட்சியும் அரசியலமைப்பும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.