இஸ்ரேலில் பராமரிப்பு துறைசார்ந்த தொழில்களை மேற்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பத்துப் பேருக்கான விமான ரிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நாளை இஸ்ரேலுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்கள்.
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் 2020ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக பராமரிப்பு துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி இலங்கை சேர்ந்த 370 பேர் பராமரிப்பு துறைசார்ந்த தொழில்களை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் சென்றுள்ளார்கள்.
இந்தாண்டில் இந்த துறைசார்ந் மேலும் இரண்டாயிரம் தொழில்களை இலங்கையர்களுக்கு வழங்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார இதன்போது தெரிவித்தார்.
இஸ்ரேலில் இந்த தொழிலை பெற்றுக்கொள்வதற்காக வெளிநபர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.