இலங்கையிலிருந்து சட்டரீதியாக வெளிநாடு சென்ற குடும்பங்களில் சிலர் பல்வேறு சிக்கலை எதிர் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டரீதியான வெளிநாடு சென்ற ஒரு குடுப்பத்தின் நிலைமையை எடுத்து கூறும் வகையிலும் பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இலங்கையிலிருந்து ஒரு தமிழ் குடும்பம் லண்டனுக்குச் சட்ட ரீதியாக சென்றுள்ளது. அங்குச் சென்ற பின்னரே, நாம் சட்ட ரீதியாக வந்தாலும் ஒரு பிரச்சினைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வெளிநாடு” என்ற சொல் நிறையப் பேர் விருப்பம் சொல்லாகும். முன்பு சட்டவிரோதமாகவே வெளிநாடு செல்ல வேண்டும். இவ்வாறு போகும்போது பல உயிர் ஆபத்துக்கள் ஏற்படும். இதனால் பலபேரின் குடும்பங்கள் அழிந்துள்ளதாகவும் அறிகின்றோம்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர்களும் அதிகமான வெளிநாடு செல்கின்றனர்.
அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வரும் 46 வயதுடைய நபர் ஒருவர், தனது மனைவி பிள்ளைகளுடன் வெளிநாடு முடிவெடுத்துள்ளார்.
இவர் சட்டரீதியான செல்வதற்கான முயற்சியே எடுத்துள்ளார். எவ்வாறாயினும் வெளிநாட்டுப் பயணத்தில் அனுபவம் இல்லாததால் முகவர் ஒருவரை நாடியுள்ளார். வெளிநாடு செல்லவிருந்த நபர் சிறந்த கல்வியாளராக இருந்ததால் கல்வியின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், “உங்களுக்கு வயது அதிகமாகிவிட்டது. அதனால் தாங்கள் வேலை வாய்ப்பை உருவாக்கி வெளிநாடு செல்லுங்கள்” என முகவர் அல்லது நிறுவனத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு ஒப்புக்கொண்ட அவர், வேலை விசாவில் செல்ல முடிவு செய்துள்ளார். அதன் நிமித்தம் ஒரு மாதத்தில் வேலை கிடைத்து விட்டது.
இதற்காக முகவர்கள் குறித்த நகரிடம் 20 ஆயிரம் பவுண் பெற்றுள்ளனர். (இலங்கை ரூபாவில் சுமார் 72 இலட்சம் ரூபா) அவருக்கு மட்டும் செலவழித்துள்ளார். அதைவிட மனைவி மற்றும் மகளுக்கு 3,000 பவுண் பெற்றுள்ளனர்.
சரியான பதில் அளிக்கவில்லை
இதனால் தனது உடைமைகளை விற்றுள்ளார். பல வழிகளில் பணத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் டிக்கெட்டுகளுக்காக 8 இலட்சம் ரூபா செலவு செய்துள்ளார். சுமார் 1 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர்.
இவ்வாறு செலவழித்து லண்டனுக்குப் போய் இறங்கியுள்ளனர். பின்னர் அவருக்கு கிடைக்கப்பெற்ற பணியிடத்தை அல்லது நிறுவனத்தைத் தேடிப் போயுள்ளார். இதன்போது அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்று அங்குள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எல்லா விடயமும் சட்ட ரீதியாக நடைபெற்றுள்ளது. அப்படியிருக்க இப்படியொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, தன்னை அனுப்பிய முகவர்களை தொடர்பு கொண்டு கதைத்தபோது, சரியான பதில் அளிக்கவில்லை.
தனது உடைமைகளை இழந்துள்ள குறித்த நபர், தற்போது பல பொருளாதார சிக்கலிலும் உள்ளார் அத்துடன், உயர் தரம் பரீட்சை எழுதவேண்டிய மகளும் கல்வியை நிறுத்தியுள்ளார்.
எனவே வெளிநாடு செல்வோர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும். விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.