உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், கெர்சன் நகரில் உக்ரைனின் Su-25 போர் ஜெட் விமானங்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஜாபோரிஜியா பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று தாக்குதலை ரஷ்ய படைகள் தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கப்பல்கள் மீது தாக்குதல்
ககோவ்கா அணை தகர்க்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு செவ்வாய் கிழமை கெர்சன் நகரம் பெரும் பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது.
ரஷ்ய போர் கப்பல்கள் மீது தாக்குதல் மேலும் ஞாயிற்றுக்கிழமை 6 அதிவேக ட்ரோன் படகுகளுடன் ரஷ்ய கடற்படை கப்பல்கள் மீது உக்ரைன் தோல்வியற்ற தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரஷ்ய கப்பல் படை கப்பல் Priazovye, கருங்கடலின் வடகிழக்கு பகுதிகளில் உள்ள டர்க்ஸ்ட்ரீம் மற்றும் ப்ளூ ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களின் வழிதடங்களை கண்காணிப்பது மற்றும் பாதுகாப்பதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.