இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரைச் சேர்ந்த சீன் கிரீக்டன் என்ற நபர் தீவிர வலது சாரி சிந்தனையாளராக இருந்து வந்தார். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஹிட்லரின் நாஜிக் கருத்துக்களை ஆதரித்தும், நாஜிக் கொடிகளை கையில் பிடித்தும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தார்.
இதற்கெல்லாம் உச்சமாக, இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்களை கொல்வதற்க்காக சமூக வலைதளம் மூலமாக அழைப்பு விடுத்த கிரீக்டனை போலீசார் கடந்த செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர். அப்போது, சீன் கிரீக்டன் போலீசாரிடம் ஹிட்லர்தான் தன்னுடைய கடவுள் என திமிறாக பதில் கூறியுள்ளார்.
இந்நிலையில், சீன் கிரீக்டன் மீதான குற்றத்தை விசாரித்த லண்டன் நீதிமன்றம், நாஜிக் கொள்கைகளை பின்பற்றியதற்காகவும், ஹிட்லரை கடவுள் என அழைத்தற்காகவும் சீன் கிரீக்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.