Loading...
பொகவந்தலாவை – கெம்பியன் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், குறித்த சிறுவன் கழிவறையில் நேற்று(11.06.2023) மாலை தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம்
மேலும் அந்த சிறுவனின் இரண்டு சகோதரர்களும் குறித்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Loading...
சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரதே பரிசோதனைக்காக டிக்கோய ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...