Loading...
ரஷ்யாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தெற்கு சபோரிஜியா பகுதியில் உள்ள லோப்கோவோ, லெவாட்னே மற்றும் நோவோடரிவ்கா கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.
Loading...
படையினர் மொத்தம் 6.5 கிமீ முன்னேறியதாகவும், உக்ரைனின் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது 90 சதுர கிலோமீற்றர் வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Loading...