நைவேத்தியங்கள் :
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும்.
முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயச நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
அபிஷேகப்பிரியன் :
சிவராத்திரி அன்றுதான் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். அதனால், நாமும் அந்த தினத்தில் பூஜை செய்து சிவபெருமானை வழிபடுவது சிறந்த பலனைத்தரும்.
சிவனை ‘அபிஷேகப்பிரியன்’ என்றும் சொல்வார்கள். அதனால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய செய்ய நமது துன்பம் அகலும். உடல் நோய்கள் நீங்கும். மனம் தெளியும். சகல நன்மைகளும் உண்டாகும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் அந்த அபிஷேக காட்சியை தரிசனம் செய்யலாம்.
சீக்கிரம் அனுக்கிரகம் செய்யும் மூர்த்தி சிவன். அதேபோல் அவருக்கு சீக்கிரம் கோபமும் உண்டாகும். அதனால் அவருக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் திரவியங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் நம் மனதுடன் உடலும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
திருமாலுக்கும், நான்முகனுக்கும் இடையே சிவபெருமான் ஜோதி லிங்க வடிவமாகத் தோன்றியருளிய தருணமே ‘சிவராத்திரி’. இன்று இந்தப் புண்ணிய ராத்திரியில், 11.15 மணியிலிருந்து 12.45 மணி வரையுள்ள காலத்தை ‘லிங்கோத்பல காலம்’ என்று குறிப்பிடுவார்கள் பெரியோர்கள் சிவராத்திரியின் நான்கு யாமங்களிலும் பூஜை செய்ய முடியாதவர்கள், குறைந்த பட்சம் லிங்கோத்பவ காலம் வரையிலாவது கண் விழித்து சிவபெருமானை வணங்க வேண்டும். இந்த நேரத்தில் ஜபிக்கப்படும் ஐந்தெழுத்து, பல மடங்கு புண்ணியத்தைக் கொடுக்கவல்லது.
அட்சதைகள் விவரம் :
அபிஷேகம் முடிந்தபிறகு சிவலிங்கங்களைச் சுத்தமான உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். பிறகு சந்தனம், குங்குமம் சார்த்தி அட்சதை முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நான்கு ஜாமங்களுக்கும் நான்குவிதப்படி படையல் படைக்க வேண்டும்.
முதல் ஜாமத்தில் அரிசியை படைத்து, பிறகு சதபத்திரம், தாமரை, வில்வம் போன்றவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் கோதுமையைப் படைத்து, ஆத்தி, அருகு போன்றவற்றால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, கேதுமை, பயறு, தினை, கடலை பருப்பு போன்ற ஏழுவகை தானியங்களை அட்சதையாகப் படைத்து நறுமணம் வீசும் மல்லிகை, கொன்றை மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்கு நிவேதனம் செய்யும்போத கீழ்க்கண்டபடி பண்டங்களைப் படைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.
முதல் ஜாமத்தில் சுத்த அன்னம், காய்கறி ஆகியவற்றையும் கூடவே வில்வப் பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும்.
இரண்டாம் ஜாமத்தில் லட்டு போன்ற பண்டங்களையும் கூடவே பலாப்பழத்தையும் நிவேதனம் செய்ய வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் நெய் கலந்த பலகாரங்கள், பாயசம் கூடவே மாதுளை பழத்தையும் எல்லா வகைக் கனிகளையும் நிவேதனம் செய்து வணங்க வேண்டும்.
ஒவ்வொரு ஜாமத்தில் பூஜை முடிந்ததும் மந்திரம் ஓதும் வேதியர்களுக்கு தட்சணை முதலியன அளித்து அன்னமும் வழங்க வேண்டும். அதுபோல் தன்னால் முடிந்த அளவு தானங்கள் செய்ய வேண்டும். அஷ்ட மந்திரங்களால் வழிபட்டு மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து தன்னுடைய வேண்டுதலை இறைவனிடம் கூற வேண்டும்.
பூஜை முடிந்த பிறகும் அன்றைய தினத்தை வீணாக்காமல் சிவபெருமானின் புண்ணியக் கதைகளைக் கேட்டோ, சிவநாம கீர்த்தனைகளைப் பாடியோ, கேட்டோ பொழுதைக் கழிக்க வேண்டும். பொழுது விடிந்ததும் நீராடி நித்தியக் கடன்களை முடித்தபின் ஏதேனும் ஒரு சிவாலயம் சென்று பரமேஸ்வரனை வழிபட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு மாத சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து பூஜை செய்து மறுவருடம் மகாசிவராத்திரி அன்று விரதத்தை உத்தியாபனம் செய்து நிறைவு செய்ய வேண்டும்.
சிவராத்திரி விரதத்தை நிறைவு செய்யும் நாளில் வீட்டிலேயே சிறு அலங்கார மண்டபம் செய்ய வேண்டும். அதில் பார்வதி சமேதரராக பரமேஸ்வரனைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும். ஹோமம் வளர்த்து முதலில் நவக்கிரக சாந்திக்காக நவக்கிரக ஹோமம் செய்யவும். பின்னர் நெய், பாயசம் முதலியவை கொண்டு ருத்திர மந்திரம் ஒதி, ஹோமம் செய்ய வேண்டும்.
பூஜை முடிவுறும் தருவாயில் பொன்னால் சிவபெருமானுடை யதும் வெள்ளியால் பார்வதியுடைய பிரதிமைகளைச் செய்து சிறிய தட்டில் வைத்து வேதியருக்குத் தானம் செய்ய வேண்டும். வேதியர்களுக்குப் புத்தாடை போன்றவை தர வேண்டும். வேதியர்க்கு அன்ன தானமும், பசு தானமும் செய்யலாம் குறைந்த பன்னிரண்டு நபர்களுக்கேம் அன்னமளிக்க வேண்டும்.
மறுநாள் அமாவாசை நாளில் பித்ருக்களுக்குப் பிண்டப் பிரகடனம் செய்து வேதியர்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும். விரைவில் இதற்கான பலன் கிடைக்கும் என்பது திண்ணம்.