2017-ஆம் ஆண்டின் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று `பாகுபலி-2′. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியுள்ள `பாகுபலி 2′ வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை சிவராத்திரி தினமான இன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பிரபாஸ்-அனுஷ்கா இணைந்து வில்லை நீட்டி விடுவது போன்ற ஒரு போஸ்டரை `பாகுபலி’ படக்குழு வெளியிட்டிருந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அந்த போஸ்டரை தொடர்ந்து அடுத்த போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் பிரபாஸ் யானை துதிக்கையின் மீது ஏறுவது போன்ற புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளது.