டுவிட்டரை நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற்றும் பணியில், அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரின் தலைமை நிர்வாகியான லிண்டா யாகாரினோ தன்னுடைய செய்தி குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக டுவிட்டர் 2.0 க்கான திட்டங்கள் பற்றியும் இதனில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களிள் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கியதனை தொடர்ந்து பல புதிய மாற்றங்களை செய்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், டுவிட்டரில் தவறான தகவல்களை கையாள்வதில் அவர் மேற்கொண்ட அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகியது.
இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.