லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-மீரா ஜாஸ்மின் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான படம் `சண்டக்கோழி’. கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.
`சண்டக்கோழி’ படத்திற்கு பிறகு இயக்குநர் லிங்குசாமி – விஷால் கூட்டணி `சண்டக்கோழி 2′-ஆம் பாகம் மூலம் மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்குவற்குள்ளே பல்வேறு பிரச்சனைகளால் இப்படத்தின் பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி இப்படத்திற்கான பணிகள் பூஜையுடன் விரைவில் துவங்க உள்ள நிலையில், இயக்குநர் லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் `சண்டக்கோழி 2′ படம் மீண்டும் தள்ளிப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இந்த தகவல் குறித்து லிங்குசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது,
அடுத்த படத்தில் விஷாலுடன் மீண்டும் இணைந்து `சண்டக்கோழி 2′-வை இயக்க உள்ளேன். அதன் பிறகு உடனடியாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல்ராஜா-வின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கதில் சூர்யா நடித்து கடைசியாக வெளியான `அஞ்சான்’ படம் போதிய வரவேற்பை பெறாததால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு `சண்டக்கோழி 2′ படத்தை லிங்குசாமி இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.