ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இரண்டு படங்களையும் பிப்ரவரி 17-ந் தேதியே வெளியிடப்போவதாக ஆரம்பத்தில் அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் ‘சிவலிங்கா’ ரிலீஸ் தேதியை மட்டும் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்தனர். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை அதற்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.
இந்நிலையில், தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போகிறது. தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் ரிலீஸ் தேதி இன்னமும் உறுதியாகாத சூழ்நிலையில், ‘சிவலிங்கா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி ‘சிவலிங்கா’ படத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். ‘சிவலிங்கா’ படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கியுள்ளார். ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.