பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சிஎஸ்கே இடம் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் சிறந்த 10 பிரபலமான விளையாட்டு அணிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான கால்பந்து கிளப்புகளை விட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆகிய இரண்டு கிரிக்கெட் அணிகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.
பேஸ்புக் தளத்தில் டாப் 5 விளையாட்டுகளில் ஒரே ஒரு விளையாட்டு (கிரிக்கெட்) அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம் பெற்றுள்ளது. கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் (31,6 மில்லியன்) நம்பர் 1 விளையாட்டு அணியாக உள்ளது.
கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (30,2 மில்லியன்) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து கால்பந்து அணிகளான மான்செஸ்டர் சிட்டி (27,9 மில்லியன்), பார்சிலோனா (24,2 மில்லியன்), லிவர்பூல் (14,9 மில்லியன்) ஆகிய அணிகள் உள்ளன.
இதேபோல இன்ஸ்டாகிராமில் அனைத்து விளையாட்டு அணிகளிலும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அதிக பாலோவர்களை கொண்ட அணிகளாக உள்ளது. முதல் இடத்தில் ஆர்சிபி (285 மில்லியன்), 2-வது இடத்தில் சிஎஸ்கே (276 மில்லியன்), 3, 4, 5 ஆகிய இடங்கள் முறையே ரியல் மாட்ரிட் (259 மில்லியன்) மும்பை இந்தியன்ஸ் (196 மில்லியன்), பார்சிலோனா (162 மில்லியன்) பாலோவர்களை கொண்டுள்ளது. உலக அளவில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆர்சிபி முதல் இடத்திலும் சிஎஸ்கே 2-வது இடத்திலும் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது.