ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.அபேரத்ன சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரணை, பொருவடந்தவில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.டி.அபேரத்னவுக்கு சொந்தமான காணியில் இன்று மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
துப்பாக்கி பயன்படுத்துவதற்கான உரிமம்
இந்நிலையில், குறித்த மக்கள் கூட்டத்தை கலைப்பதற்காக பி.டி.அபேரத்ன தமது துப்பாக்கியை பயன்படுத்தி வானத்தை நோக்கி இரு தடவைகள் சுட்டதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் எவரும் காயமடையவில்லை என ஹொரணை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், துப்பாக்கியை பயன்படுத்துவதற்கான செல்லுபடியாகும் உரிமம் அவரிடம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, பி.டி.அபேரத்ன இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.