தேவையான பொருட்கள் :
கொள்ளு – 2 கப்,
அரிசி – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 5,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
தாளிக்க…
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/4 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – பாதி
இஞ்சி – சிறிய துண்டு,
பெருங்காயம் – சிறிதளவு.
செய்முறை :
* வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான சத்தான கொள்ளு அடை ரெடி.