டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும் வரை நுளம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நுளம்புகள் ஊடாக மற்றுமொருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்பதால் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட அனைவரும் நுளம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய டெங்கு நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுகாதார இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு தடுப்புக்கான தனி வழிகாட்டுதல்
மேலும் வைத்தியசாலைகள் தொடர்பாக டெங்கு தடுப்புக்கான தனி வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வைத்தியசாலைகளில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகள் போன்ற டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் இடங்கள் என வாரத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கி ஆய்வு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.