சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் – 2டி என்ற ரொக்கெட் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த ரொக்கெட் அதன் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இச்செயற்கைகோள் வணிக தொலையுணர் சேவைகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை சரிபார்க்க பயன்படுத்தப்படும் என சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தியாங்யாங்
இன்று விண்வெளித்துறையில் சாதனை படைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் சீனாவும் தன்னை தக்கவைத்து போட்டி போட்டு வருகின்றது.
அந்தவகையில், சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த சீனா விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.