Loading...
மத்துகம, பெலவத்தை நகரின் மத்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மேகத்தன்ன பொலிஸார் தெரிவித்தனர்.
பெலவத்த மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Loading...
பெலவத்தை நகர மத்தியில் உள்ள மருந்துக் கடைக்கு முன்பாக வாள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளி இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேகத்தன்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...