Loading...
கட்சிக்கு அறிவிக்காமல் வெளி தரப்பினருடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளை உடனடியாக இடைநிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Loading...
கட்சியின் ஒழுக்கத்தை பாதுகாத்தல் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை சரியான முறையில் வழிநடத்தும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கலந்துரையாடலின் போது எதிர்கால தேர்தல் நடவடிக்கை குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Loading...