சமீப காலமாக ‘செல்பி’ மோகம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. மிகப்பெரிய தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைத்து தரப்பினரும் ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர். தற்போதுதான் ‘செல்பி’ பிரபலமாகியுள்ளது.
ஆனால் அமெரிக்கர் ஒருவர் பல ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார்.
அவரது பெயர் கார்ல் பாடன் (64). அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் தங்கி உள்ளார். இவர் சமூக வலைதளமான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் செல்போன்கள் வருவதற்கு முன்பே ‘செல்பி’ எடுக்க தொடங்கினார்.
கடந்த 30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வருகிறார். முதலில் சாதாரண 35 எம்.எம். கேமராவில் டிரைபோட் மற்றும் சாதாரண வெளிச்சத்தில் செல்பி எடுத்தார்.
30 ஆண்டுகளாக ‘செல்பி’ எடுத்து வந்தாலும் இன்னும் அதன் மீதான அவரது மோகம் குறையவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் செல்பி எடுப்பேன் என அவர் கூறினார்.
இதுவரை தான் எடுத்த செல்பி புகைப்படங்களை பால்டனில் கண்காட்சியாக வைத்துள்ளார். மேலும் ‘பேஸ்புக்‘ இன்ஸ்டனகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.