தம்புள்ளையில் 5 வயது மகளையும், 7 வயது மகனையும் கொடூரமாக தாக்கிவிட்டு உயிரை மாய்க்க முயற்சித்த தந்தை ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த தந்தை, வீட்டில் உள்ள கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில், அயலவரால் மீட்கப்பட்டு, தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தந்தையும் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பிள்ளைகளின் தாயார் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இரண்டு பிள்ளைகளும் தந்தையின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.
பிள்ளைகள் சித்திரவதை
தம்புள்ளை லெனதொர நாயக்கும்புர பிரதேசத்தில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் தந்தை இதற்கு முன்னரும் கொடூரமான முறையில் பிள்ளைகளை சித்திரவதை செய்துள்ளார்.
அவ்வாறு சித்திரவதை செய்து வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு படங்களையும் வீடியோக்களையும் அனுப்பி பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர், பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நபரே மனைவியை வெளிநாட்டு வேலைக்கு செல்ல தூண்டிய நிலையில் தற்போது இவ்வாறு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.