Loading...
`ஜாக்சன் துரை’ படத்திற்கு பிறகு சிபிராஜ், மணி செய்யோன் இயக்கத்தில் `கட்டப்பாவ காணோம்’ படத்தில் நடித்துள்ளார். விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தினி, காளிவெங்கட், யோகிபாபு, மைம் கோபி, லிவிங்ஸ்டன், திருமுருகன், ஜெயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இதில் இயக்குனர் நலன்குமாரசாமியும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
முன்னதாக சிபிராஜ் நடித்த `நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நாய் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது போல இந்த படத்தில் ஒரு மீன், கதையின் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.
Loading...
ஆனந்த் ஜீவா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி திரைக்கு வரும் என்று புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிபிராஜ் தற்போது, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் `சத்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து தெகிடி பட இயக்குநர் ரமேஷுடன் புதிய படத்தில் இணைய உள்ளார்.
Loading...