கழுத்துறை- மதுகம பிரதேசத்தில் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுகம பிரதேசத்தின் அருகேயுள்ள புளத்சிங்கள, ஏகல்ஓயா, திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின், அவரிடம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட தோட்டா துப்பாக்கி ஒன்றும் அதற்கான குழாய் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள்
இதனையடுத்து சந்தேகநபர் மதுகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட் பின் அவரை 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர் துப்பாக்கியை கொண்டு ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.