Loading...
இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரிகள், சிறிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
Loading...
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உள்ளூர் சந்தையில் விலை உயர்வு மற்றும் முட்டை தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தலா 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...