Loading...
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு சொந்தமான களனி பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு, குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடித்து சேதப்படுத்திய, அங்குள்ள உபகரங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Loading...
இதன்போது, குறித்த வீட்டில், வீட்டினை பராமரிக்கும் நபர் ஒருவர் மட்டும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த வீட்டை இன்று காலை இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சப்புகஸ்கந்த பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...