டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல். போட்டியின் 9-வது லீக் ஆட்டம் திண்டுக்கல்லில் இன்று இரவு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இந்த சீசனில் இதுவரை மோதிய 2 ஆட்டத்திலும் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
முதல் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்சையும், 2-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சையும் வீழ்த்தியிருக்கிறது. இதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்தில் கோவை கிங்சை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இருக்கிறது. கோவை கிங்ஸ் 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது.