பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்கவின் சேவை காலம் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாத கால சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில்,எதிர்வரும் 26ஆம் திகதி அவருடைய சேவை காலம் நிறைவடையவுள்ளது.
மார்ச் 26 ஆம் திகதி ஓய்வு பெற இருந்த அவருக்கு அரசு மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கியது.
முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள்
தற்போது அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, அஜித் ரோஹன, பிரியந்த வீரசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அடுத்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் தனது வெளிநாட்டு விஜயங்களை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியதும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.