ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 900 ரூபாவுக்கும், முட்டை ஒன்றை 35 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (20.06.2023) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, உற்பத்தியாளர்கள் முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றை அதிக இலாபத்துடன் சந்தைக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை
இந்தநிலையில், அதிகரித்து வரும் கோழி இறைச்சி விலையைக் கட்டுப்படுத்துவதற்காக விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதற்காக நாடளாவிய ரீதியில் கோழிக் குஞ்சுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.