Loading...
திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுவந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த இருபத்தி மூன்று வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது ஆகவே தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் 1926 அல்லது
1333 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அந்த எண்ணத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.
Loading...