Loading...
இலங்கையில் அனைத்துத் தொழில்துறையினருக்கும் தொழில் அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவ்வாறான அனுமதிப்பத்திரம் ஒன்றின் மூலம் அனைத்து தொழில்துறையினருக்கும் தொழில்ரீதியான அங்கீகாரம் மற்றும் கௌரவம் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
தொழில் வாய்ப்பு
அதன் மூலம் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் போது மட்டுமன்றி, இலங்கையிலும் கூட பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (20.06.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து போது அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
Loading...