Loading...
இலங்கையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் தற்காலிக ஓட்டுனர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
Loading...
ஓட்டுநர் உரிமங்கள்
அத்துடன் இம்மாதம் 19ஆம் திகதி வரை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் இந்த இரண்டு வருட கால நீடிப்புக்கு தகுதியானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் அச்சிடப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட அட்டைகள் பற்றாக்குறையால், 6 மாதங்களுக்கும் மேலாக 8 இலட்சத்துக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் அச்சிடப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...