சமூக வளைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாகிராம் இன் தாயகமான மெட்டா நிறுவனம் “சேனல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேனல் அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் படைப்பாளிகள் அவர்களது புதிய பதிவுகளை தினசரி தங்களது பின் தொடர்பாளர்களுக்கு(subscribers) இதன் மூலம் பதிவிட முடியும்.
இந்த சேனல் அம்சத்தை பயனர்கள் உருவாக்கும் போது அவர்களது கணக்கினை பின்தொடர்பவர்களுக்கு சேனலில் இணையும் படி அறிவுறுத்தும் நோட்டிபிகேஷன் உடனடியாக அனுப்பப்படும்.
சேனலின் கட்டுப்பாடுகள்
இந்த சேனல் அம்சத்தில் சம்பந்தப்பட்ட கணக்கை வைத்து இருக்கும் படைப்பாளிகள் மட்டுமே புதிய பதிவுகளை இந்த சேனலில் பகிர முடியும்.
பின்தொடர்பாளர்களால் இந்த பதிவுகளை பார்வையிட்டு ரியாக்ஷன் மற்றும் லைக்கள் மட்டுமே வழங்க முடியும்.
மேலும் சேனல் பின் தொடர்பாளர்களாக இல்லாதிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சேனலில் இருந்து எந்தவொரு செய்திகளையும் பெற முடியாது.
இதேவேளை ஏற்கனவே டெலிகிராமில் இது போன்ற அம்சம் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.