Loading...
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சுமார் 16 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Loading...
துறைமுக சுங்கக் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கப்பலில் குளிரூட்டப்பட்ட கொள்கலன் பெட்டியொன்றில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading...