இலங்கையில் காச நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பு சிறுவர்கள் பாதிப்பு
குறித்த அறிக்கையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் காச நோயினால் பாதிக்கப்பட்ட 59 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
கடந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் 49 சிறுவர்களே காசநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இனம்காணப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள்
இந்த நிலையில் மொத்தமாக 187 சிறுவர்கள் காசநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டிருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விசேட மருத்துவ நிபுணர் சன்ன டி சில்வா, கர்ப்பத்தில் இருக்கும் போதே சிறுவர்களுக்கு காச நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாவும், அவ்வாறு நோய் தொற்றிய ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகள் உயிராபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.