Loading...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அடுத்தவாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் கின் கேங்கின் (Qin Gang) அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்தல்
Loading...
அதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கையில் சீன முதலீடுகளை அதிகரித்தல், இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை வலுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து இந்த சுற்றுப் பயணத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது .
Loading...